
நாடு முழுவதும் ஏழை மற்றும் எளிய நடுத்தர மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல நல்ல திட்டங்களும் அரசாங்கத்தை ரேஷன் கார்டுகள் மூலமாக சென்றடைகிறது. அதன் பிறகு ரேஷன் கடைகளில் கள்ளச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு இழப்பு ஏற்படும் நிலையில் அதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றை கடத்தியதால் தற்போது அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி ரேஷன் பொருட்கள் கடத்தலால் 69,108 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதாவது வீட்டு உபயோக செலவு கணக்கெடுப்புபடி (HCES) தரவுப்படி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஜூலை மாதம் வரையில் மற்றும் சுமார் 20 மில்லியன் டான் ரேஷன் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளது. இது இந்தியா முழுதும் மக்கள் பயன்படுத்தும் ரேஷன் பொருட்களில் 28% ஆகும். இதன் காரணமாகத்தான் தற்போது அரசாங்கத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கார்டு ஆதார் அட்டையுடன் இணைப்பதன் மூலம் இது போன்ற கடத்தல் சம்பவங்களை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.