
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ரேஷன் கார்டு என்பது முக்கியமான ஆவணமாக உள்ளதால் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷனில் வழங்கப்படும் பொருட்களை வைத்து கோடிக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
இந்த நிலையில் ரேஷனில் பொது மக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகிய பொருள்கள் சில நேரம் பதுக்கப்படுவதும் கடத்தப்படுவதும் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. இது தொடர்பாக புகார் அளிக்க தமிழக அரசின் பொது விநியோகத் துறை பிரத்தியேக தொலைபேசி எண்ணை செயல்படுத்தி வருகின்றது. 1800 -599-5950 என்ற இந்த எண்ணில் தொடர்பு கொண்டு ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து புகார் அளிக்கலாம். அதன் மீது ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.