ராஜஸ்தான் மாநிலம் பர்மீர் மாவட்டத்தில் வசிப்பவர் ஷகூர் கான். இவருடைய மனைவி ரஹ்மான். 28 வயதான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையையில் ஷகூர் கான் தன்னுடைய குடும்பத்திற்கு வரும் ரேஷன் பொருட்களை அதே பகுதியில் வசிக்கும் தன்னுடைய தாய் தந்தைக்கு கொடுக்கும்படி தன்னுடைய மனைவியிடம் அடிக்க கூறிவந்துள்ளார்.

இதனால் இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த ரஹ்மத் தன்னுடைய குழந்தைகளை தூக்கிக்கொண்டு வீட்டிற்கு அருகே உள்ள குடிநீர் தொட்டிக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.