
பெரும்பாலும் நகர்ப்புறங்களில் சாலைகளில் மாடுகள் சுற்றி திரிவதோடு அவைகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் திகழ்கிறது. அதோடு சில சமயங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை மாடுகள் முட்டி தாக்கும் கோர சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் தற்போது புனேவில் உள்ள ஒரு சாலையில் போக்குவரத்து சிக்னலுக்காக வாகனங்கள் சாலையில் காத்துக் கொண்டிருந்தது.
அப்போது வாகனங்களுடன் சேர்ந்து மாடு ஒன்றும் சிக்னலுக்காக காத்து நின்றது. அந்த மாடு சிக்னல் வரும் வரை பொறுமையாக அங்கு காத்து நின்றது. அந்த வீடியோவில் சிவப்பு சிக்னல் போடும்போது நின்ற மாடு பச்சை சிக்னல் வரும் வரை பொறுமையாக காத்திருந்தது போன்ற அமைந்துள்ளது. இந்த வீடியோவை புனே போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
View this post on Instagram