தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், நடன மாஸ்டர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் நடிப்பை தாண்டி ஆதரவற்றவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தன்னால் முடிந்த அளவுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய தம்பியான எல்வினுக்கு காஸ்ட்லி கார் ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். அதாவது எல்வின் தற்போது புல்லட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புல்லட் திரைப்படத்தை பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் தன் தம்பியின் நடிப்பை பாராட்டி அவருக்கு காஸ்ட்லி காரை பரிசாக கொடுத்துள்ளார். அதோடு தன் தம்பியின் நடிப்பை பார்த்து தான் மிகவும் சந்தோசப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.