
கர்நாடகாவின் தவனகெரே மாவட்டத்தில் நடந்த பெண்ணிடம் நடுரோட்டில் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால், ஜமால் அஹமது ஷமீர் என்பவர் மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார்.
இதனால் 38 வயதான ஷபினா பானு என்பவரை சிலர் உருட்டுக்கட்டை மற்றும் இரும்புக் கம்பியால் கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் சிசிடிவி மற்றும் செல்போன் வீடியோ மூலம் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஷபினா பானுவின் உறவுகார பெண் நஸ்ரின், அவரது குழந்தைகள் மற்றும் ஃபயாஸ் என்பவருடன் புக்கம்புடி மலைக்கு சென்றிருந்தார். அதன்பின் இரவு நேரமாகிவிட்டதால் நஸ்ரினும் ஃபயாஸும் பானுவின் வீட்டில் தங்கியுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பிய கணவர், வீட்டில் மூவரையும் பார்த்ததும், ஷபினாவின் நடத்தையில் சந்தேகம் எனக் கூறி, மசூதி நிர்வாகத்தில் புகார் அளித்தார். அதன்பின் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஷபினா பானுவை நேரில் தாக்கியதுதான் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, முகமது நியாஸ், முகமது கவுஸ்பீர், சந்த் பாஷா, இனாயத் உல்லா, தஸ்தாகிர் மற்றும் ரசூல் ஆகிய ஆறுபேரை கைது செய்துள்ளனர். சமூகத்தில் பலரும் இந்த கொடூர தாக்குதலுக்கு எதிராக வலியுறுத்தி, நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர்.