
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில் இந்த போட்டியுடன் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டனர்.
இந்நிலையில் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் இடத்தை நிரப்புவதற்கு 4 வீரர்கள் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். அதாவது ருது ராஜ் கெய்க்வாட், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் அவர்களின் இடத்தை நிரப்புவார்கள் என்று கூறியுள்ளார். மேலும் அதேபோன்று டி20 கிரிக்கெட் போட்டியில் பிளேயிங் லெவனில் தொடக்க வீரராக ஜெயஸ்வால் இருப்பார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.