பிரதமர் நரேந்திர மோடி ஆந்திர மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு 2 லட்சம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க இருக்கிறார். இன்று டெல்லியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு வந்த பிரதமர் மோடியை ஏர்போர்ட்டில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து ஆந்திராவில் உள்ள பல்கலைக்கழக மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி கிளம்பிய நிலையில் செல்லும் வழியில் ரோடு ஷோ நடத்தப்பட்டது.

அதன்படி திறந்த ஜீப்பில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்திய நிலையில் அவருடன் ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் இருந்தனர். அப்போது சாலையில் இருபுறமும் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் பூக்களை அள்ளி ஊசி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் சாலை இரு புறங்களிலும் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.