
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தலைமையிலான போலீசார் திருச்சி சாலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் வேகமாக வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அதன் பின் போலீசார் நடத்திய விசாரணையில் திருச்சியை சேர்ந்த பிரபல கொள்ளையர்களான ராஜ் கமல், பாலகுமார் என்பவர்கள் காரை ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் இவர்கள் மீது திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நாமக்கல்லில் ஒரு சில இடங்களில் திருட முயற்சி செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் கார் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.