
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது இந்திய லெவன் அணியை வாசிம் ஜாஃபர் அறிவித்துள்ளார்
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடங்க உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 09 ஆம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் போட்டி குறித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டியில் இவர்களை ஆட வைக்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி, தங்களது பிளேயிங் லெவனையும் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போதுபிப்ரவரி 9-ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு, இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர் ட்விட்டரில் தனது இந்திய அணி லெவனை தேர்வு செய்துள்ளார்.

அதில், ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். 3வதாக புஜாராவும், 4வதாக விராட் கோலியையும், ஷுப்மான் கில் 5வது பேட்டராகவும் அவர் பெயரிட்டார். மேலும் 6வது வீரராக கேஎஸ் பாரத் விக்கெட் கீப்பராகவும் தேர்வு செய்த அவர், தனது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களாக முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை இணைத்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஜாஃபரின் இந்தியா லெவன் :
1. ரோஹித் சர்மா (கே)
2. கே.எல்.ராகுல்
3. சேதேஷ்வர் புஜாரா
4. விராட் கோலி
5. ஷுப்மன் கில்
6. கேஎஸ் பாரத் (வி.கீ)
7. ரவீந்திர ஜடேஜா
8. ஆர்.அஷ்வின்
9. குல்தீப் யாதவ்
10. முகமது ஷமி
11. முகமது சிராஜ்
My India XI for First Test:
1. Rohit (c)
2. KL
3. Pujara
4. Virat
5. Shubman
6. Bharat (wk)
7. Jadeja
8. Ashwin
9. Kuldeep
10. Shami
11. SirajHard to leave out Axar but Kuldeep brings variety as a wrist spinner.
What's your XI? #INDvAUS #BorderGavaskarTrophy
— Wasim Jaffer (@WasimJaffer14) February 6, 2023