
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பழனி முருகர் கோவில் தலைமை அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் வேலை பார்க்கும் பிரேம்குமார், உதவி பொறியாளர் முத்துராஜா ஆகியோர் ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பிரேம்குமார் மற்றும் முத்துராஜா மீது வழக்குபதிவு செய்தனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் பிரேம்குமாரையும், முத்துராஜாவையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.