
பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் சம்பந்தமான படிப்பை படிப்பதற்காக இன்று இரவு லண்டன் செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதாவது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் இந்தியாவில் இருந்து 12 பேர் அடங்குவர்.
இதில் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களின் செலவுகளை பல்கலைக்கழகமே ஏற்றுக் கொள்ளும். இந்நிலையில் அண்ணாமலை இன்று இரவு சென்னையில் இருந்து லண்டன் கிளம்புகிறார். அங்கு 3 மாதங்கள் வரை அவர் தங்கி படிக்க இருக்கிறார். மேலும் தான் லண்டன் சென்றாலும் தன்னுடைய இதயம் மற்றும் சண்டை தமிழ்நாட்டில் தொடரும் எனவும் அங்கிருந்து தொடர்ந்து கட்சி பணிகளை தொடர்ந்து கவனிப்பேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.