
நாட்டில் லவ் ஜிகாத் என்ற பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக பாஜக அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. குறிப்பாக இதற்கு எதிராக உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கூட இயற்றப்பட்டது. அதாவது பாஜக ஆளும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். அதாவது காதல் திருமணம் செய்து கொண்ட பின் அவரை மதமாற்றம் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஒருவேளை ஏமாற்றி காதல் திருமணம் செய்த பிறகு கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்தது.
அவ்வாறு திருமணம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு அவருக்கு 10 வருடங்கள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அந்த புதிய சட்டத்தின்படி சிறை தண்டனையானது 20 வருடங்களாக அதிகரிக்கப்படுவதோடு அபராத தொகையும் 5 லட்சமாக உயர்த்தப்படும். முதலில் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், அவரின் பெற்றோர், சகோதரர் மற்றும் உடன்பிறந்தவர்கள் ஆகியோர் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் தற்போது யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.