
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தொழில்கள் செய்து மக்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அதன்படி படித்து முடித்தவர்கள் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்கிறார்கள்.அதே சமயம் சிலர் சுய தொழில் செய்தும் பணம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் தற்போது ஒருவர் பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதன் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம் அது உண்மைதான்
அதாவது சீனாவில் கியூ குவின் என்பவர் வசித்து வருகிறார். இவர் சமூக வலைதளம் மூலம் பெண்களுக்கு பணக்கார ஆண்களை எப்படி திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். இதன் மூலம் அவர் வருடத்திற்கு இந்திய மதிப்பிற்கு ரூ. 163 கோடி வரை சம்பாதிக்கிறார். மேலும் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.