லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. இன்று நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில் நாளை காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.