
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்கிறார்.
தளபதி 68 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா மற்றும் பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்க உள்ளனர். தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் பட குழு சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று இருந்த நிலையில் நடிகர் விஜய் தற்போது தாய்லாந்து செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.