
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரை ரசிகர்கள் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்த நிலையில் அவரும் அந்த பட்டத்தை ஏற்றுக்கொண்டார். இதேபோன்று மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை மஞ்சுவாரியரையும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதுகு அவமானமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ரசிகர்கள் பலர் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இது தேவையில்லாத விவாதத்தை ஏற்படுத்துகிறது. அது எனக்கு அவமானத்தை மட்டும் தான் கொண்டு வருகிறது. எனவே எனக்கு அந்த பட்டம் தேவையில்லை. எனக்கு ரசிகர்களின் அன்பு மட்டும் போதும் என்று கூறியுள்ளார். மேலும் நடிகை மஞ்சு வாரியர் இப்படி கூறியது சினிமா வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.