கோயம்புத்தூர் மாவட்டம் செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பூப்பெய்தினார். இந்த நிலையில் மாணவியை பள்ளி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிக்கவில்லை.

மாறாக  வெளியே தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைத்தது பெரும் சர்ச்சையே ஏற்படுத்தியது. இதுகுறித்து மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பெயரில் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர்.

இதனை தொடர்ந்து மாணவியை  வெளியே அமர வைத்த பள்ளி முதல்வர் ஆனந்தி , பள்ளி தாளாளர் தங்கவேல் பாண்டியன், மற்றும் அலுவலக உதவியாளர் சாந்தி ஆகியோர்  போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் மூவரும் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விசாரணை நாளில் நீதிமன்றத்தில் சரண் அடைந்த தங்கவேல் பாண்டியன், ஆனந்தி சாந்தி ஆகியோரின் ஜாமின் மனுவை பரிசீலிக்கும் படி மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரின் ஜாமின் மனுவை பரிசிலுக்கும்படி கோவை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.