
அரபிக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் நிலையில் தமிழகத்திற்கு இதனால் பெரிய அளவில் மழை பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயலுக்கு டாணா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்று புயலாக மாறும் நிலையில் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் நாளை மறுதினம் உருவாகி ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் நோக்கி கரையை கடக்க உள்ளது. மேலும் இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இன்று தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் பெரம்பலூர், திருவண்ணாமலை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.