வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்து தாழ்வு பகுதி டிசம்பர் 1ஆம் தேதி தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் கடல் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து டிசம்பர் 1ஆம் தேதி மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.