இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுப்பெற கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வங்கக்கடலில் ரிமால் புயல் உருவான நிலையில் இது இந்த வருடம் உருவாகும் இரண்டாவது பெரிய புயலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை புயல் உருவானால் அதற்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த ASNA என்ற பெயர் வைக்கப்படும். மேலும் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்க கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது அடுத்த இரு தினங்களில் மேற்கு வட மேற்கு திசையில் ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா கடற்கரை பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.