
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்று வேகமா மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டம் மலைப்பகுதிகளில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், மற்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.