இன்றைய காலகட்டத்தில் இணையவழி மோசடிகள் மூலம் பலரும் பணத்தை இழந்து விடுகின்றனர். அப்பாவி மக்களின் பணத்தை திருடுவதற்காக மோசடி கும்பல் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் எச்சரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் புதிய மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.

அது என்னவென்றால் வங்கி கணக்குக்கு 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி அதை திருப்பி அனுப்பும்படி கோரிக்கை வைக்கின்றனர். அதனை நம்பி UPI-யில் பேலன்ஸ் பார்க்க பாஸ்வேர்டு கொடுத்தால் உடனே லிங்க் மூலம் பணத்தை திருடி விடுவதாக எச்சரித்துள்ளனர். எனவே 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் SMS வந்தால் உடனே பேலன்ஸ் பார்க்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.