
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி புதை விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதத்தில் மீதம் இன்னும் 6 நாட்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பொது விடுமுறை. அதனைப் போலவே ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் வங்கி சேவைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
மேலும் ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் வார இறுதி விடுமுறைகள். எனவே இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் இணைய வங்கி சேவைகளை தடையில்லாமல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.