சமீப நாட்களாகவே பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் சில வீடியோக்களில் தமிழர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வைரல் வீடியோக்கள் மர்ம ஆசாமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வடமாநில தொழிலாளர்கள் சிலர் அச்சமடைந்து நாங்கள் எங்களது ஊருக்கு போகிறோம் என சொல்லி செல்கின்றனர். இதுபோன்ற வீடியோக்கள் உண்மையில்லை என்று தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டது குறித்து உண்மை நிலை அறிய பீகார் அதிகாரிகள் குழு தமிழகம் வருகிறது. தமிழகத்தில் பீகார் மாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக, சட்டப்பேரவையில் பாஜகவினர் கடும் அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் மார்ச் 11ஆம் தேதி இது குறித்து விசாரிக்க பீகார் காவல் துறை, அரசு அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர்.