
பிரபல காமெடி நடிகரான வடிவேல் தமிழ் திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வடிவேலு நடிப்பில் கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார்.
வருகிற 24-ஆம் தேதி கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இயக்குனர் சுந்தர்.சி வடிவேல் பற்றி பேசியுள்ளார்.
நானும் வடிவேல் சாரும் இணைந்து கிட்டத்தட்ட 20 வருடங்களாக வேலை பார்த்து வருகிறோம். 2003-ஆம் ஆண்டு அவருடன் பயணத்தை தொடங்கினேன். ஒரு நடிகர் இப்படி நடிக்க முடியுமா என்று அவரை பார்த்து உயர்ந்து கொண்டிருக்கிறேன்.
நடிப்பில் லெஜன்ட் என்று சொன்னால் அது வடிவேல் சார் தான். ஒரு காட்சியை எடுக்க நான் 10 சதவீதம் யோசித்தாலே போதும். மீதமுள்ள 90% அவரை நடித்து படத்தை சிறப்பாக்கி விடுவார். வடிவேல் சார் மீது எனக்கு ஒரு வருத்தம் இருந்தது.
அவர் இடைவெளியில் கொஞ்சம் நாள் நடிக்காமல் இருந்தது தான். இனிமேல் அவரை பார்த்து சிங்கம் களத்தில் இறங்கி விட்டது என எல்லோரும் சொல்ல வேண்டும் என சுந்தர்.சி கூறியுள்ளார்.