
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது கங்குவா என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் 38 மொழிகளில் நான் இந்தியா திரைப்படமாக 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாக இருக்கிறது. இந்த படம் உலகம் முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் அக்டோபர் 20-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரின்ஸ் ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் பாலிவுட் ஹீரோயின் திஷா பதானின் நடிக்கிறார்.
இந்நிலையில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் திரைக்கு வராத நிலையில் பிரமோஷனுக்காக மட்டுமே 22 கோடி வரை செலவு செய்துள்ளதாக தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளது சூர்யா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்கு 7 கோடி ரூபாயும், பிரமோஷனுக்காக மட்டும் வட இந்தியாவில் 15 கோடியும் அவர் செலவு செய்துள்ளாராம். மேலும் வட இந்தியாவில் படத்தை வெளியிடுவதற்காகவே மொத்தம் 22 கோடியை செலவு செய்துள்ளதாக ஞானவேல் ராஜா கூறியுள்ளார்.