தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் ‌ அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜயும் அவருடைய மனைவி சங்கீதாவும், முன்னதாக பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் நிலையில் சில வருடங்களாக இருவரையும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக பார்க்க முடியவில்லை.

இதனால் சங்கீதா மற்றும் விஜய்க்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாகவும் தகவல்கள் பரவியது. இருப்பினும் தெரிந்த வட்டாரங்கள் அது வதந்தி என்றே கூறியது. இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவரும் ஒரு திருமண நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இது  தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையே விரிசல் ஏற்பட்டதாக வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய ரசிகர்கள் இந்த அன்ஸீன் வீடியோவை தற்போது வைரலாகி வருகிறார்கள். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் சரியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.