விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இந்நிலையில் கட்சி, விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் பொழுது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன் என்பவர் தற்போது விலகி திமுகவில் இணைந்துள்ளார்.

இதனால் அப்செட்டில் உள்ள தலைமை, தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது. இவர் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.