கோவை மற்றும் பெங்களூரு கண்டோன் மென்ட் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேரம் வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும். மறு மார்க்கமாக பெங்களூரில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.45 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த நேரம் மாற்றம் வருகின்ற மார்ச் 11ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது. மேலும் கோவை மற்றும் கே எஸ் ஆர் பெங்களூர் இடையேயான உதய் எக்ஸ்பிரஸ் புதன்கிழமை தவிர இதர நாட்களில் இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த ரயில் சேவையானது வருகின்ற மார்ச் 5ம் தேதி முதல் வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.