
வடகொரியா உலகின் மிக வன்முறையான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அந்த நாட்டில் உள்ள கடுமையான விதிகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் தென் கொரியாவுக்கு பலரும் தப்பி செல்கின்றனர். ஆனால் அப்படி பிரிந்து செல்பவர்கள் வடகொரியாவில் தங்கி இருக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கு பணம் அனுப்பக்கூட முடியாது.
இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் வடகொரியாவில் நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் கடுமையாகி வருவதால் பணம் இல்லாத காரணத்தால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் புல் சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுடைய கால்கள் மற்றும் கைகள் வீக்கம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.