உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பிரபால் சிங் என்பவர் பாஜக கட்சியின் ‌தலைவராக இருக்கிறார். இவருக்கு அபினவ் சிங் என்ற மகன் இருக்கிறார். இவர் வயதான தம்பதியை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அந்த வாலிபர் முதியவரை மிரட்டும் நிலையில் திடீரென அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதனால் அவர் நிலை தடுமாறிய நிலையில், சத்தம் கேட்டு அவருடைய மனைவி ஓடி வந்தார். ஆனால் அவரையும் அந்த வாலிபர் கொடூரமாக தாக்கினார். அவர்களுக்கிடையே என்ன பிரச்சனை என்பது சரிவர தெரியவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.