வயநாடு மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடைகள் அவசியம் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், வடகரை புத்தூப்பனம் பகுதியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் கரீம் நாடக்கல் உடனடியாக தனது கடையில் இருந்த அனைத்து ஆடைகளையும் எடுத்துக்கொண்டு மகன் முஹம்மது கலஃப் உடன் வயநாடு புறப்பட்டார். பின்னர், ஆடைகள் போதாது என்று நினைத்து வெளியிலிருந்தும் ஆடைகளை வாங்கிச் சென்றார்.

கரீம் கடையிலிருந்து பெரும்பாலான மேக்ஸி, பர்தா, உள்ளாடைகள், லுங்கி, முண்டி, ஜீன்ஸ், டிரஸ், சட்டை, துண்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றார். படுக்கை விரிப்புகள், போர்வைகள், திரிகோணிகள் ஆகியவற்றை வெளியிலிருந்து வாங்கினார். இவையனைத்தையும் மேப்பாடி முகாமில் நிவாரணப் பணியில் ஈடுபட்டவர்களிடம் ஒப்படைத்தார்.தன்னுடைய வாழ்வாதாரமான தொழிலில் இருந்த அனைத்தையும் நிவாரணம் வழங்கியது…. அவருடைய மனிதாபிமானத்தை தாண்டி சில சொல்லமுடியாதவற்றை பிரதிபலிக்கிறது….இதுபோல் இன்னும் நிறைய நல்ல உள்ளங்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்…

அதேபோல், வடகரை பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் லத்தீஃப் கல்லறக்கலும் தனது ‘ஏவா ஜூனியர் ஜெர்சி’ கடையிலிருந்து இரண்டு நாட்களாக வயநாட்டுக்கு ஆடைகளை அனுப்பி வைத்துள்ளார்.