ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள யூடா காலனியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் 8 மாத கர்ப்பிணியான அனுஷாவை (27) அவரது கணவர் ஞானேஷ்வர் கழுத்தை நெறித்து கொலை செய்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் திங்கட்கிழமை காலை நடந்ததாக தெரியவந்தது. மயக்கம் அடைந்த மனைவியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் அனுஷா ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவித்தனர். பின்னர் ஞானேஷ்வர்  தானாகவே போலீசில் சரணடைந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஞானேஷ்வர், விசாகப்பட்டினத்தில் ஸ்கவுட்ஸ் மற்றும் சாகர்நகர் வியூப்பாயிண்ட் அருகே ஒரு ஃபாஸ்ட் ஃபுட் சென்டர் நடத்தி வந்தார்.

அனுஷாவின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.