அரியலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கனகவல்லி. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு கனகவல்லிக்கும், காரைக்குடி பகுதியில் வசித்து வரும் செல்வராஜன் என்பவரின் மகன் செந்தில் குமரவேலு என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது வரதட்சணையாக 25 சவரன் தங்க நகை, 2,50,000 ரொக்கம் மற்றும் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் செந்தில்குமரவேலு தனது குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு கனகவள்ளியை மேலும் வரதட்சணை தருமாறு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனை அடுத்து கனகவள்ளியை வரதட்சணை வாங்கிவிட்டு வருமாறு அவரது தாய் வீட்டில் கொண்டு விட்டுள்ளார். மகளின் திருமண வாழ்க்கையை நினைத்து மன அழுத்தத்தில் இருந்த கனகவள்ளியின் தந்தை ராஜேந்திரன் கடந்த 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து தனது தந்தையின் மரணத்திற்கு தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என மனவேதனையில் கனகவல்லி கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தந்தை இறந்த மறு மாதமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியலூர் காவல் நிலையத்தில் கனகவள்ளியின் தாயார் தனது மகள் மற்றும் கணவரின் இறப்பிற்கு மருமகன் செந்தில்குமரவேலு மற்றும் அவரது அம்மா கலாவதி, அண்ணன் முருகன் மற்றும் அரிகிருஷ்ணன் வேலு ஆகியோர்தான் காரணம் என புகார் அளித்துள்ளார்.

இந்த வழக்கு அரியலூர் மகளிர் காவல்நிலையத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மகளிர் நீதிமன்றத்திற்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரதட்சணை கொடுமை செய்து மகள் மற்றும் தந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த செந்தில் குமாரவேலு மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், 8 ,81,000 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.