
வட மாநிலங்களில் கன மழை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கும், தண்டவாளத்தின் பாயிண்டுகளை சரிபார்த்து ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ரயிலிற்கு வழிகாட்டும் விதமாக பாயிண்ட் மேன்கள் செய்துள்ள பணி வீடியோவாக இணையதளங்களில் வலம் வருகின்றன.
அதாவது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்னும் பகுதியில் கனமழையின் காரணமாக தண்டவாளங்கள் சரிவர தெரியவில்லை. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ரயிலுக்கு முன்னால் 3 பாயிண்ட் மேன்கள் தண்ணீரில் நடந்து சென்ற படி ரயிலுக்கு வழிகாட்டினார்கள். இதைத்தொடர்ந்து ரயில் பாயிண்ட்மன்களை பின் தொடர்ந்து சென்று ரயில் நிலையத்தை அடைந்தது. இந்த நிகழ்ச்சி லாரி, பஸ் போன்ற வாகனங்கள் சாலையில் பின்னோக்கி செல்லும்போது பின்னால் இருந்து உதவியாளர்கள் வரலாம் வா ..வரலாம் வா …என்று சொல்வது போல இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் இணைய தளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram