கடும் வெப்பம் காரணமாக கங்கை நதி நீர்மட்டம் வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது

வடமாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவரும் வெயிலால் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

கடும் வெயிலால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு சரிந்தது. இந்த நிகழ்வு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.