திருச்சி முன்னாள் எஸ்பி மற்றும் தற்போதைய டி.ஐ.ஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய குடும்பத்தினருக்கும் தனக்கும் எதிராக சமூக வலைதளம் மூலமாக அவதூறு பரப்புவதாகவும் தனிப்பட்ட முறையில் மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் 2 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு தரவேண்டும் எனவும் திருச்சி குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இன்று விசாரணைக்கு வருண்குமார் நேரில் ஆஜரானார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, என்னை தனியாக சந்தித்து சீமான் மன்னிப்பு கேட்பதாக கூறி ஒரு தொழிலதிபர் மூலம் தூதுவிட்ட நிலையில் நான் அதற்கு சம்மதிக்கவில்லை. பொதுவெளியில் மன்னிப்பு கேட்பதாக இருந்தால் சீமான் அதை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். நான் சீமான் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளேன். அடுத்ததாக சிவில் வழக்கு தொடர இருக்கும் நிலையில் சீமானின் பேச்சுக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது. நிச்சயம் அவருக்கு தண்டனை வாங்கி தருவேன் என்று கூறினார்.

அதோடு மைக் முன்னாடி மட்டும் தான் புலி மற்ற இடத்தில் சீமான் எலி என்று கூறினார். இதற்கு தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, வருண் குமார் என்ன பெரிய அப்பாடக்கரா.? அவர்தான் தவறு செய்தார். அப்படி இருக்கும்போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர்தான் என்னிடம் கெஞ்சினார் என்று கூறினார்.