இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் தற்போது “வந்தே மெட்ரோ” என்ற புதிய குறுகிய தூர ரயில் சேவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இது தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 100 கிலோமீட்டர் குறைவான தூரம் கொண்ட நகரங்களுக்கு இடையில் இந்த வந்தே மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்துள்ளார்.

இது வந்தே பாரத் ரயில்களை விட வித்தியாசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் வந்தே பாரத்தோடு ஒப்பிடும்போது வந்தே மெட்ரோ வேறுபட்ட வடிவமாக இருக்கும் என்றும் இது ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை போன்ற மிக அதிக அளவில் அதிர்வெண் கொண்ட ஒரு வடிவமைப்பில் கட்டமைக்கப்படுகிறது. 100 கிலோமீட்டர் குறைவான தூரம் உள்ள நகரங்களுக்கு இடையே இயக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.