வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறும். அவற்றில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ அதையே இறுதி தேர்வாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடம் பொது தேர்வு குறித்த பயத்தை போக்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் பொதுத் தேர்விலையே நல்ல மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தால் மாணவர்கள் இரண்டாம் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.