
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 29ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுதவிர சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.