
மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நடைபயிற்சி, மாரத்தான் ஒட்டம் போன்றவற்றில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் அரசு நிகழ்ச்சிகளுக்காக வெளியூர்களில் சென்று தங்கும் போது காலை நேரங்களில் அந்தப் பகுதிகளில் நடைபயணம் செய்து காணொளி காட்சிகளை இணையத்தில் பகிர்ந்து உடற்பயிற்சி பற்றிய விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு வருவார்.
தினந்தோறும் குளியலறையில் 2 குடம் தண்ணீரில் குளிக்கும் வழக்கத்திலிருந்து சற்று மாறுபட்டு இன்று காலை மகிழ்ச்சிகரமான கிராம குளியல். #Masubramanian #TNHealthminister #highdive #highdivejump #trending pic.twitter.com/rcblqfZ96u
— Subramanian.Ma (@Subramanian_ma) February 1, 2023
அதன்படி ஈரோடு சென்ற அமைச்சர் மா.சுபிரமணியன் கிணற்றில் குளிக்கும் காணொளி காட்சி ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தினம் தோறும் குளியலறையில் இரண்டு குடம் தண்ணீரில் குளிக்கும் பழக்கத்திலிருந்து, இன்று சற்று மாறுபட்டு மகிழ்ச்சிகரமான கிராம குளியல் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.