கன்னியாகுமாரி அருகே சுற்றுலாவிற்கு வந்திருந்த போது வழித்தவறி சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனை மூதாட்டி ஒருவர் பத்திரமாக பராமரித்து காவல் துறையினரின் உதவியுடன் பெற்றோரிடம் சேர்த்துள்ளார். குமரி மாவட்டம் மலையோர பகுதியான மருத பாறை பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் என்ற சிறுவன் சுற்றித்திரிந்துள்ளான்.

இதை கண்ட பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு சிறுவனை தனது தாயார் சுகுமாரியின் அனுமதியோடு வீட்டிற்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் அடைக்கலம் கொடுத்து உணவு வழங்கி வந்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சிறுவனை மீட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.