
மோட்டார் சைக்கிள் உள்பட பல்வேறு வாகனங்களில் முகப்பு விளக்குகள் கண்கள் கூசும் அளவிற்கு பிரகாசிப்பதால் சில நேரம் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே முகப்பு விளக்குகளின் ஒளியை கட்டுப்படுத்தும் விதமாக அதன் மீது போக்குவரத்து போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று போக்குவரத்து போலீசார் ஸ்பென்சர் சந்திப்பு, கீழ்பாக்கம் ஈகா தியேட்டர் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சிக்னல்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டியுள்ளனர். இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி மோட்டார் சைக்கிளில் இரண்டு பேரும் தலைக்கவசம் அணிந்து சென்றவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டியுள்ளனர்.