தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகள், முதியோர், கர்ப்பிணிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நடக்க இயலாதவர்கள் உள்ளிட்டோர் 1950 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்ல வாகனம் அனுப்பி வைக்கப்படுமாம்.