சென்னை மாவட்டம் கொளத்தூரில் பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி கொளத்தூர் பொன்னியம்மன்மேடு பகுதியில் போலீசார் ஒரு வீட்டை ரகசியமாக நோட்டுமிட்டனர்.

அப்போது அந்த வீட்டில் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. அதன் அடிப்படையில் பெண் காவலர்கள் அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு ரேவதி மற்றும் ஆர்த்தி என இரு பெண்கள் இருந்தனர்.

இரண்டு பெண்களும் பாலியல் தொழில் நடத்தியதால் இருவரையும் போலீசார் உடனடியாக கைது செய்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணை நடத்திய போது  வித்யா நகர் பகுதியில்  ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததை ஒப்புக் கொண்டனர்.

எனவே இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மீட்கப்பட்ட பெண்கள் மகளிர் காப்பகத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டனர்.