
திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் பகுதியில் கோகுல்நாத் (35)-சாமுண்டீஸ்வரி (17) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ராகவர்தினி, ருத்ரா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் கோகுல்நாத்துக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் பங்கு சந்தையில் பணம் செலுத்தினால் அதிக லாபம் பெறலாம் என்று குறுந்தகவல் வந்துள்ளது. இதை நம்பி அவர்கள் வீட்டில் இருந்த தங்க நகைகளை அடகு வைத்து ரூ.8 லட்சம் பணம் செலுத்தியுள்ளனர். அதோடு உறவினர்களிடமும் நண்பர்களிடமும் கடன் வாங்கி மொத்தமாக ரூ.22 லட்சம் வரை செலுத்தியுள்ளார்.
ஆனால் அவருக்கு எந்தவித லாபமும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க ஆரம்பித்தனர். இதனால் கணவன் மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து சம்பவ நாளில் பூச்சி மருந்து குடித்தனர். இது தொடர்பாக கோகுல்நாத் தன் தந்தைக்கு தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக திருவள்ளூர் டவுன் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.