
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவித அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பிப்ரவரி ஒன்னாம் தேதி முதல் ஒரு குறிப்பிட்ட சில ஃபோன்களில் whatsapp தனது சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மெட்டாவுக்கு சொந்தமான வாட்சப் செயலி சில பழைய ஸ்மார்ட் போன்களில் இன்று முதல் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் மொபைல் போனில் வாட்ஸ் அப்பை செயல்படுத்த ஆண்ட்ராய்டு பதிப்பு 4.0.3 ஐ பதிவிறக்கம் செய்ய வேண்டும். Whatsapp சேவையை இழக்கும் மொபைல் போன்களின் பட்டியலில் ஆப்பிள் ஐபோன் 6எஸ்,ஆப்பிள் ஐபோன் 6எஸ் பிளஸ்,
Apple iPhone SE (1st Gen), சாம்சங் கேலக்ஸி கோர், Samsung Galaxy Trend Lite, Samsung Galaxy Ace 2, Samsung Galaxy S3 Mini, Samsung Galaxy Trend Ii, Samsung Galaxy X கவர் 2, வின்கோ டார்க்நைட், எல்ஜி ஆப்டிமஸ் எல்7 டூயல், எல்ஜி ஆப்டிமஸ் எஃப்3 ஆகியவை இணைந்துள்ளது.