இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களுடைய திறமைகளை எளிதாக சமூக வலைதளங்கள் மூலமாக பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் சப்பாத்தி மாஸ்டர் ஒருவர் தான் செய்யும் சப்பாத்தியை வானில் பறக்கவிட்டு செய்யும் வித்தை காட்சியானது பார்வையாளர்களை ஆச்சர்யம் அடைய வைத்துள்ளது.

சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் ஒருவர் தன்னுடைய திறமையினை வெளிக்காட்டி ஏழு மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். இந்த வீடியோவில் இவர் தான் சில சப்பாத்தியை உயர பறக்கவிட்ட நிலையில் மீண்டும் பறந்து சென்று வேகத்தில் தன்னுடைய கைக்கு வந்துள்ளது. இந்த காட்சி பார்ப்போரை நம்ப முடியாத அளவிற்கு ஆச்சரியமடைய வைத்துள்ளது.