தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் நிலையில் மாநாட்டுக்கான ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாநாட்டு பணிகளுக்கான குழுக்கள் மற்றும் பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. நம்முடைய முதல் மாநில மாநாடு மற்றும் கொள்கை திருவிழாவை எண்ணி நீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது எனக்கு தெரியும்.

அரசியலை வெற்றி மற்றும் தோல்விகளைக் கொண்டு மட்டுமே அளவிடாமல் ஆழமான அக உணர்வாகவும் கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் அந்த தருணம் மாநாட்டில் மேலும் அழகாக அமையும். அரசியல் களத்தில் வெறும் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம்முடைய வேலை கிடையாது. செயல் மொழி மட்டும்தான் அரசியலில் நம் வேலை. மாநாடு பணிகளில் மட்டுமின்றி அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்

பயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மனதில் நீங்கள் ஏற்படுத்த வேண்டும். மேலும் உங்களுடைய முகங்களை காண வேண்டும் என்பதற்காகவே என் மனம் தவம் கிடைக்கிறது. இதை நீங்களும் அறிவீர்கள். என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.